கண்டாச்சிபுரம்;சித்தாத்துார் பாலதண்டாயுதபாணி கோவிலில் தைப்பூச காவடி விழா நடைபெற்றது. கண்டாச்சிபுரம் அடுத்த சித்தாத்துார் சிவஞானக்குன்றில் அமைந்துள்ள, பாலதண்டாயுதபாணி கோவிலில் 65ம் ஆண்டு தைப்பூசக் காவடி விழா நடந்தது. நேற்று முன்தினம் காலை 7 மணிக்கு விநாயகர் பூஜையும், மூலவர் தண்டாயுதபாணிக்கு சந்தன அலங்காரமும் நடந்தது. பின்னர் பம்பை நதியில் திருமஞ்சனம் நிகழ்ச்சியும்,மஞ்சள் இடித்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது.பின்னர் குளக்கரையில் காவடிகளுக்கு அபிஷேக ஆராதனை, பக்தர்கள் வேல் அணியும் நிகழ்ச்சியில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு நேர்த்திக் கடன் செலுத்தினர்.ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகளும்,ஊர்பொதுமக்களும் செய்தனர்.