பதிவு செய்த நாள்
10
பிப்
2020
10:02
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில், விடுமுறை தினத்தையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.
மருதமலை சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில், தைப்பூச தேர்த்திருவிழா நேற்று முன்தினம் வெகுவிமர்சையாக நடந்தது. தைப்பூச திருவிழாவில் எட்டாம் நாளான நேற்று, காலை, 4:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு, சுப்ரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். பகல், 12:00 மணிக்கு, ஆடு மயில் வாகனத்தில், சுப்பிரமணிய சுவாமி, வள்ளி, தெய்வானையுடன் திருவீதி உலா வந்தார். மாலை, 5:00 மணிக்கு, சுப்பிரமணிய சுவாமி, வள்ளி, தெய்வானையுடன் பொன்னூஞ்சல் ஆடும் நிகழ்ச்சியும், அதன்பின், வேடர் பறிலீலை குதிரை வாகனத்தில், திருவீதி உலா நடந்தது. மாலை, 6:00 மணிக்கு, யாகசாலை பூஜையும், அதனை தொடர்ந்து, தெப்பத் திருவிழாவும் நடந்தது. தைப்பூசத்தைஒட்டி, பாதையாத்திரை துவங்கிய பக்தர்கள், பால்குடம், காவடிகளுடன் நேற்று கோவிலுக்கு வந்தனர். விடுமுறை தினம் என்பதால், ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேற்று சுவாமியை தரிசனம் செய்தனர்.