விழுப்புரம்:சாலாமேடு அஷ்டவராகி அம்மன் கோவிலில் சித்திரையையொட்டி 108 பால்குட அபிஷேகம் நடந்தது. விழுப்புரம் அருகே உள்ள சாலாமேடு பகுதியில் அஷ்டவராகி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் சித்திரை மாத வெயிலின் தாக்கத்தை தனிக்க 108 பால்குட அபிஷேகம் நேற்று நடந்தது. நேற்று காலை 9 மணிக்கு பால் குடங்களுடன் ஊர்வலமாக வந்த பெண்கள் அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்து வழிபட்டனர். இதனையொட்டி அஷ்டவராகி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் ஏராமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர்.