பாளை உச்சினிமாகாளி அம்மன் கோயிலில் நாளை கொடை விழா!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30ஏப் 2012 11:04
திருநெல்வேலி: பாளை.யாதவர் உச்சினிமாகாளி அம்மன் கோயில் கொடை விழா நாளை(1ம் தேதி)நடக்கிறது.பாளை.ராமசாமி சன்னதி தெருவில் உள்ள யாதவர் உச்சினிமாகாளி அம்மன், தூத்துவாரி அம்மன் கோயில் கொடை விழா கடந்த 24ம் தேதி துவங்கியது. விழாவை முன்னிட்டு நாளை(1ம் தேதி) காலை 10.30 மணிக்கு பால்குட ஊர்வலம் நடக்கிறது. பாளை.தலைமை தபால் நிலையம் முன் இருந்து புறப்படும் ஊர்வலம் 6 ரதவீதிகளை சுற்றிவந்து கோயிலை அடைகிறது. மதியம் 12 மணிக்கு அம்பாளுக்கு அபிஷேகம் நடக்கிறது. மதியம் 2 மணிக்கு மேள தாளத்துடன் தாமிரபரணி பேராத்து செல்வி அம்மன் ஆற்றுத்துறைக்கு கரகம் புறப்படுகிறது. 3 மணிக்கு அம்பாள் கரகத்துடன் கோயிலுக்கு புறப்படுகிறார். 3.30 மணிக்கு சாமியாடிகள் மஞ்சள் நீராடி மேளதாளத்துடன் வருகிறார்கள். மாலை 4.30 மணிக்கு வீடுகள் முன்பு பொங்கலிடுதலும், தொடர்ந்து வீடு வீடாக பூஜை செய்தலும் நடக்கிறது. இரவு 11.30 மணிக்கு உச்சினிமாகாளி அம்மன் சப்பரம்,தூத்துவாரி அம்மன் கோயிலுக்கு செல்கிறது. இரவு 1 மணிக்கு தீபாராதனை பூஜைகள் நடக்கிறது. 2ம் தேதி காலை 6 மணிக்கு தீபாராதனை பூஜைகள் நடக்கிறன. ஏற்பாடுகளை விழாக்குழு தலைவர் குத்தாலமுருகன், செயலாளர் ராமசாமி, பொருளாளர் லட்சுமணன், சந்திரன் யாதவ், டால் சரவணன், நாராயணன், ராமசாமி மற்றும் இளைஞர் அணியினர் செய்து வருகின்றனர்