பதிவு செய்த நாள்
13
பிப்
2020
01:02
தர்மபுரி: தர்மபுரி அடுத்த, குப்பாகவுண்டர் தெரு ஆத்துமேட்டில் உள்ள, சர்வாங்கசுந்தரி சமேத நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில், நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. இக்கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, கடந்த, 8 காலை, 9:30 மணிக்கு மேல் கொடியேற்றம், 10:00 மணிக்கு மேல் காப்புகட்டும் நிகழ்ச்சி, 10:30 மணிக்கு மேல், முதல்கால யாகசாலை பூஜை நடந்தது. நேற்று முன்தினம் காலை, 11:00 மணிக்கு, தீர்த்தக்குடம் மற்றும் பால்குட ஊர்வலமும், 12:00 மணிக்கு முளைபாலிகை அழைத்தல், இரவு, 7 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜை நடந்தது. மாலை, 7:30 மணிக்கு மேல், கணபதி, லட்சுமி உள்ளிட்ட பல்வேறு யாகசாலை பூஜை மற்றும் ?ஹோமங்கள் நடந்தன. விழாவின் முக்கிய நாளான நேற்று காலை, 10:00 மணிக்கு, கோவில் கோபுர கலசத்துக்கு புனித நீர் ஊற்றி, கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு, கோவில் நிர்வாகம் சார்பில், அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று காலை, 10:00 மணி முதல், 48 நாட்களுக்கு தொடர்ந்து மண்டல பூஜை நடக்க உள்ளது.