பதிவு செய்த நாள்
13
பிப்
2020
01:02
ஈரோடு: எல்லைமாரியம்மன் கோவில் கும்பாபி?ஷக விழாவில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர். ஈரோடு, காளமேகம் வீதியில் எல்லை மாரியம்மன் கோவில் உள்ளது. புனரமைப்பு பணிகள் முடிந்து கோவிலில், நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. நேற்று முன்தினம் காலை, 8:15 மணிக்கு மகா கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம் நடந்தது. பின்னர், பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று தீர்த்தம் எடுத்து வந்தனர். மாலை, 6:00 மணிக்கு மங்கள இசை, விநாயகர் வழிபாடு, முதல் கால யாக பூஜை, தீபாராதனை நடந்தது. நேற்று காலை, 7:00 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை, விசஷே உபசார பூஜை, கலசங்கள் யாக சாலையில் இருந்து மூலாலயம் செல்லுதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. காலை, 9:00 மணிக்கு சிவசமய பண்டித குரு, பாலமுருகன் ஈசான் சிவாச்சாரியார் ஆகியோர், எல்லை மாரியம்மன் கோவில் கோபுர கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். பின்னர், பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. இதையொட்டி, எல்லை மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர்.