பதிவு செய்த நாள்
16
பிப்
2020
04:02
உடுமலை:பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்காக, உடுமலை திருப்பதி ஸ்ரீ வேங்கடேச பெருமாள் கோவிலில், ஸ்ரீ லட்சுமி ஹயக்கிரீவர் சிறப்பு யாகம் நடக்கிறது.உடுமலை திருப்பதி, ஸ்ரீ வேங்கடேச பெருமாள் கோவிலில், கல்வி, அறிவு, ஞானம் ஆகியவற்றுக்கு, அதிபதியான, ஸ்ரீலட்சுமி ஹயக்கிரீவர் தனி சன்னதியில் எழுந்தருளியுள்ளார்.10ம் வகுப்பு மற்றும் பிளஸ்-1,2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெறவும், உயர் கல்வியில் சிறக்கவும், வரும், 19 மற்றும் 20ம் தேதி சிறப்பு பூஜைகள் நடக்கின்றன.வரும் 19ம் தேதி, மாலை, 6:00 மணிக்கு, சிறப்பு யாகம் துவங்குகிறது. 20ம் தேதி காலை, 10:00 மணிக்கு, நிறை வேள்ளி, சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடக்கின்றன.பங்கேற்பவர்களுக்கு யாகத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட, பேனா, பென்சில் மற்றும் பிரசாதம் வினியோகம் நடக்கும்; இந்த சிறப்பு யாகம், பூஜைகளில் மாணவ, மாணவியர் பங்கேற்று பயன்பெறுமாறு, உடுமலை திருப்பதி ஸ்ரீ பாலாஜி சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.