சந்தேகம் ஒரு கொடிய நோய். வேலையிலோ, படிப்பிலோ சந்தேகம் இருப்பது கூடாது. இருந்தால் கேட்டு தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும். இதை விடக் கொடுமை கணவன், மனைவிக்குள் ஒருவர் மீது ஒருவர் சந்தேகப்படுவது. இது வாழ்வையே அழித்து விடும். சிலருக்கு கடவுள் மீது சந்தேகம். ஜெபிக்கலாமா வேண்டாமா என்று. ‘‘நீங்கள் ஐயம் ஏதுமின்றி நம்பிக்கையுடன் இருந்தால் போதும். ‘மலையைப் பார்த்து பெயர்ந்து விழு’ எனச் சொன்னால் கூட அப்படியே நடக்கும். உன் வாழ்க்கை மீது நம்பிக்கை இழக்கத் தொடங்கினால் பயத்துடன் வாழ்வாய். புல்லில் பனி பெய்தால் அது சூரிய ஒளியில் பளிச்சென்று மின்னுகிறது. புல்லைக் கூட இப்படி அழகு செய்யும் ஆண்டவர், உங்களுக்கு இன்னும் மிகுதியாகச் செய்வார் இல்லையா? ஒரு மரத்தை நோக்கி நம்பிக்கையுடன் ‘நீ வேரோடு பெயர்ந்து போய் கடலில் வேரூன்றி நில்’ என்றாலும் அது உங்களுக்கு கீழ்ப்படிந்து நடக்கும். நம்பிக்கை இல்லாத தீயமனம் கடவுளை விட்டு விலகும். இத்தகைய மனம் யாருக்கும் இராதபடி பார்த்துக் கொள்ளுங்கள். நம்பிக்கை கொண்டவர்கள் பாக்கியம் பெற்றவர்கள்” என்றார்.