தேவகோட்டை : தேவகோட்டையில் சத்குரு தியாகபிரம்ம 173 வது ஆராதனை விழா ஐந்து நாட்கள் நடந்தது.
விழாவை முன்னிட்டு துணை தலைவர்ராமசாமி துரைவீட்டில் இருந்து ராமசந்திரமூர்த்தி, சத்குரு தியாகராஜர் படங்கள் ஊர்வலமாக சங்கரர்கோவிலுக்கு எடுத்து வரப்பட்டது. துவக்கவிழா தலைவர் சோமசுந்தரம் தலைமையில் நடந்தது.செயலர் பாலசுப்பிரமணியன் வரவேற்றார். செயலர் ராமசாமி அறிக்கை படித்தார். முன்னாள் ஐகோர்ட் நீதிபதி சொக்கலிங்கம் துவக்கி வைத்து ஆன்மிக சொற்பொழிவாற்றினார்.பரத்வாஜ் ராமன் வீணை, வயலின், மிருதங்கம் உட்பட பல்துறை இசை கலைஞர்களின் பஞ்சகீர்த்தனை நடந்தது. சோமநாராயணன் முன்னாள் தலைவர்கள் படங்களை திறந்தார். தலைமையாசிரியர் சீனிவாசன் பேசினார்.தினமும் கர்நாடக இசை சொற்பொழிவு, கச்சேரி நடந்தது.