பதிவு செய்த நாள்
19
பிப்
2020
10:02
சேலம்: சேலம் மாவட்டம், சுக்கம்பட்டி, உதயதேவரீஸ்வரர் கோவிலில், மகா சிவராத்தி விழா, வரும், 21 மாலை, 6:00 முதல், 22 காலை, 6:00 மணி வரை நடக்கவுள்ளது. நான்குகால சிறப்பு பூஜைகளுடன், சிவராத்திரி நடப்பதால், பக்தர்கள் அபிஷேக பொருட்களை கொடுத்து, இறையருள் பெறலாம் என, கோவில் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அதேபோல், அருணா சலேஸ்வரர் கோவிலில், திருமண வைபவம், மாசாண திருவிழா நடக்கிறது. 21 காலை, 4:00 முதல், அங்காளஈஸ்வரி சமேத அருணாசலேஸ்வரருக்கு, சிறப்பு அபிஷேகம், ஆராதனை, தொடர்ந்து திருக்கல்யாணம் நடத்தி, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும். 23ல், மயான கொள்ளைக்கு புறப்படுதல், மருலாடிகோழி கடித்தல், குட்டி கடித்தல், பொங்கல் வைபவம், அன்னதானம் நடக்கும்.