வத்திராயிருப்பு, சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இக்கோயிலில் ஆடி மற்றும் தை அமாவாசை, நவராத்திரி, சிவராத்திரி மிக முக்கிய விழாவாகும். மகா சிவராத்திரியான நேற்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பக்தர்கள் அதிகாலையிலே தாணிப்பாறையில் குவியத்துவங்கினர். காலை 6:00 மணிக்கு பக்தர்கள் அனுமதிக்கபட்டனர்.மாலை 4:30 மணிக்குமேல் நடந்த பிரதோஷ வழிபாட்டில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.இரவு 7:00 மணிக்கு சுந்தரமகாலிங்கம், சுந்தரமூர்த்தி, சந்தனமகாலிங்கம் சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகளுடன், நான்கு கால சிவராத்திரி பூஜைகள் நடந்தது. பக்தர்கள் சிவபாராயணம் படித்தனர். இன்று அதிகாலை நாகாபரண அலங்கார சுந்தரமகாலிங்கத்தை பக்தர்கள் வழிபட்டனர்.வனத்துறையினர், பிப்.24 பகல் 12:00 மணி வரை பக்தர்கள் அனுமதிக்கபடுவார்கள், என்றனர்.