Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பரங்குன்றத்தில் மகா ... புவனகிரி விடங்கேஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரி விழா புவனகிரி விடங்கேஸ்வரர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மஹா சிவராத்திரி சிறப்பு பூஜை: விடிய விடிய பக்தர்கள் வழிபாடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 பிப்
2020
11:02

சேலம்: மஹா சிவராத்திரியை முன்னிட்டு, சிவன் கோவில்களில், நேற்று நடந்த சிறப்பு பூஜையில், பக்தர்கள் விடிய விடிய வழிபட்டனர்.

சேலம் சுகவனேஸ்வரர், காசி விஸ்வநாதர் கோவில்களில், சிறப்பு ஹோமம், அபிஷேகம், நான்கு கால யாக பூஜை நடந்தது. திரளான பக்தர்கள், இரவு முழுவதும் கோவிலை வலம் வந்து வழிபட்டனர். சேலம், டவுன் ரயில்வே ஸ்டஷேன் சாலை, ஐயப்பா பஜனை மண்டலி தர்ம ஆசிரமத்தில், விசஷே அபிஷேகம், சிறப்பு பூஜை நடந்தது. சூரமங்கலம், முல்லை நகர் விரிவாக்கம் பகுதி, சாய்பாபா கோவில் அருகே, பிரம்ம குமாரிகள் ஈஸ்வர்ய விஷ்வ வித்யாலயம் சார்பில், சோம்நாத் ஜோதிர்லிங்கம், மக்கள் தரிசனத்துக்கு வைக்கப்பட்டிருந்தது. திரளானோர் தரிசனம் செய்தனர். முன்னதாக, சிவபரமாத்மாவின் பெருமையை விளக்க, மூன்று ரோட்டில் இருந்து, ஜோதிலிங்கம் தரிசன பகுதி வரை, அமைதி ஊர்வலம் நடந்தது. கருங்கல்பட்டி, இரண்டாவது தெருவில், வீர சைவ ஜங்கமத்தின் சார்பில், சிவன், பார்வதி திருக்கல்யாணம் நடந்தது. சுக்கம்பட்டி, உதயதேவரீஸ்வரர் கோவிலில், நான்கு கால சிறப்பு விசஷே பூஜை நடந்தது. அதேபோல், மாநகரிலுள்ள சிவன் கோவில்களில் நடந்த பூஜையில், திரளான பக்தர்கள் வழிபட்டனர்.

10,008 ருத்ராட்சத்தில்...: கொளத்தூர், பாலவாடி, பழமையான சித்தேஸ்வரர் ஆலயத்தில், விழா குழுவினர், 10 ஆயிரத்து, 8 ருத்ராட்சம், 54 வலம்புரி, 54 இடம்புரி சங்குகளால், 6 அடி உயர சிவலிங்கத்தை உருவாக்கினர். கோவில் வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த ருத்ராட்ச சிவலிங்கத்தை, பக்தர்கள் கூட்டம், கூட்டமாக சென்று தரிசித்தனர். அதன் அருகே, ஒன்பது நவதானியங்கள் மூலம், தனித்தனியாக சிவலிங்கங்கள் உருவாக்கி வைக்கப்பட்டிருந்தன. கடந்தாண்டு நல்ல மழை பெய்து, தானியங்கள் உற்பத்தியானதால், கடவுளுக்கு நன்றி தெரிவித்து, ஒன்பது நவதானிய சிவலிங்கங்களை உருவாக்கியதாக, விழா குழுவினர் தெரிவித்தனர். பாலவாடி ஜலகண்டேஸ்வரர், அச்சங்காடு வேதநாயகி, நெல்லீஸ்வரர், மேட்டூர் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில்களில், இரவு முழுவதும், ஆறு கால பூஜை நடந்தது. பக்தர்கள் இரவு முழுதும் விழித்திருந்து வழிபட்டனர்.

மேகமூட்டத்தால்...: தாரமங்கலம், கைலாசநாதர் கோவிலில், மகா சிவராத்திரி, பிரதோஷத்தையொட்டி, நந்தி பெருமானுக்கு அபி?ஷகம், தீபாராதனை நடந்தது. பின், உற்சவர் சிவகாமசுந்தரி சமேத கைலாசநாதர் வெள்ளி ரிஷப வாகனத்தில், மூன்று முறை வலம் வரச்செய்தனர். மாலை, சூரிய கதிர், மூலவர் லிங்கம் மீது படும் என்பதால், அந்த அரிய நிகழ்வை காண திரளானோர் குவிந்தனர். ஆனால், மேகமூட்டத்தால் சூரிய ஒளி தென்படவில்லை. இன்று, சூரிய ஒளி லிங்கம் மீது படும் என, பக்தர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

பரத நாட்டியம்: ஆத்தூர், தென்பொன்பரப்பி, சொர்ணபுரீஸ்வரர் கோவிலில், ஆறுகால பூஜை நடந்தது. அதில், 16 வகை அபி?ஷக பூஜை செய்யப்பட்டது. மூன்றாம் கால பூஜையின்போது, சொர்ணபுரீஸ்வரர், பெருமாள் அவதாரத்திலும், நான்காம் கால பூஜையில் அர்த்தநாரீஸ்வரர், ஐந்து, ஆறாம் கால பூஜையில், அண்ணாமலையார் அலங்காரத்தில், சொர்ணபுரீஸ்வரர் அருள்பாலித்தார். கோவில் வளாகத்தில் பரத நாட்டியம், தேவார திருமுறை பன்னிசை நிகழ்ச்சி நடந்தது. 20 ஆயிரம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஆத்தூர் கோட்டை காயநிர்மலேஸ்வரர், கைலாசநாதர், தம்மம்பட்டி காசிவிஸ்வநாதர், வீரகனூர் கங்காசவுந்தரேஸ்வரர், வெள்ளை விநாயகர் மகாலிங்கேஸ்வரர் உள்ளிட்ட சிவன் கோவில்களில், சிவராத்திரி சிறப்பு பூஜை நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று, கும்பாபிஷேக யாகசாலை இரண்டாம் கால பூஜை ... மேலும்
 
temple news
திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், விளமல் பதஞ்சலி மனோகரர் கோவிலில் இன்று ஆனி வெள்ளிக்கிழமையை ... மேலும்
 
temple news
 சோளிங்கர்; யோக நரசிம்ம சுவாமியின் உற்சவ மூர்த்தியான பக்தோசித பெருமாள் கோவில் கோடை உத்சவம், இன்று ... மேலும்
 
temple news
புதுச்சேரி; முத்தியால்பேட்டை ராமகிருஷ்ணா நகர், லட்சுமி ஹயக்ரீவர் கோயிலில்திருபவித்ரோத்சவ விழாவை ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை;  உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் குருபூர்ணிமா விழா நடந்தது. அதனை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar