உசிலம்பட்டி : உசிலம்பட்டி அருகே பாப்பாபட்டி ஒச்சாண்டம்மன் கோயிலில் பெட்டி எடுப்பு திருவிழா நடந்தது.மகாசிவராத்திரியை முன்னிட்டு உசிலம்பட்டி கருப்பசாமி கோவிலிருந்து பெட்டி எடுக்கப்பட்டு வத்தலக்குண்டுசாலை ஒச்சாண்டம்மன்கோவிலுக்கு சென்றடைந்தது. அங்கு ஒச்சாண்டம்மன் மற்றும்21 தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. பின் அங்கிருந்து பெட்டி பாப்பாபட்டி, திம்மநத்தம், இளந்தோப்பு, கீரிபட்டி, மேக்கிழார்பட்டி, வடகாட்டுப்பட்டி, ரயில்வேபீடர்ரோடு, வத்தலக்குண்டு சாலை வழியாக மதுரை சாலை வழியில்கருப்பசாமிகோவிலில் உள்ள பெட்டி வீடு சென்றது. பாதுகாப்பு ஏற்பாடுகளை உசிலம்பட்டி டி.எஸ்.பி. வினோதினி தலைமையிலான போலீசார் செய்தனர்.