பதிவு செய்த நாள்
26
பிப்
2020
10:02
காரைக்குடி : காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன்கோயில் மாசி,பங்குனி விழாவையொட்டி பூச்சொரிதல் நடந்தது.
காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன்கோயிலில் நடைபெறும் மாசி பங்குனி திருவிழா, பிரசித்தி பெற்றவிழாவாகும். இங்கு நடக்கும் பால்குடத்திருவிழா மாவட்டத்திலேயே பெரிய விழாகும். வரும் மார்ச் 10ல் காப்புக்கட்டும் நிகழ்ச்சி நடக்கிறது.மாசி பங்குனி விழாவின் முன்னோட்டமாக நடைபெறும், பூச்சொரிதல்விழா எனப்படும் பூத்தட்டு விழா நேற்று நடைபெற்றது.முத்தாலம்மன் கோவில் பகுதி, அண்ணாநகர், ஜீவாநகர்,வர்த்தகசங்கத்தினர், ஹோட்டல் சங்கத்தினர், கணேசபுரம் உள்ளிட்டபல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்கள் தங்கள் பகுதியில் இருந்துபூத்தட்டு கொண்டு வந்து மீனாட்சிபுரம் முத்துமாரியம்மனுக்குசெலுத்தினர். ஏற்பாடுகளை தக்கார், உதவிஆணையர் சிவலிங்கம், செயல் அலுவலர் சுமதி, கணக்கர் அழகுபாண்டி செய்திருந்தனர்.