Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் ... பகவதி அம்மன் கோயிலில் பரிவேட்டை உற்ஸவ விழா பகவதி அம்மன் கோயிலில் பரிவேட்டை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கும்பகோணத்தில் மாசிமக விழா: 6 சிவாலயங்களில் கொடியேற்றம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கும்பகோணத்தில் மாசிமக விழா: 6 சிவாலயங்களில் கொடியேற்றம்

பதிவு செய்த நாள்

29 பிப்
2020
11:02

தஞ்சாவூர் :கும்பகோணத்தில், மார்ச், 8ம் தேதி நடைபெறும் மாசிமக விழாவிற்காக, ஆறு சிவாலயங்களில் நேற்று கொடியேற்றம் நடந்தது. தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில், மாசிமக திருவிழா, 8ம் தேதி நடக்கிறது.

இதற்காக, கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர், காசி விஸ்வநாதர், காளஹஸ்தீஸ்வரர், அபிமுகேஸ்வரர், வியாழசோமேஸ்வரர், கவுதமேஸ்வரர் ஆகிய, ஆறு சிவன் கோவில்களில், நேற்று காலை, கொடியேற்றம் நடைபெற்றது.ஆதிகும்பேஸ்வரர் கோவிலில், பஞ்சமூர்த்தி சுவாமிகள் சிறப்பு மலர் அலங்காரத்தில், கொடி மரம் முன் எழுந்தருளினர். அப்போது வேத பாராயணம், திருமுறைகள், சிறப்பு நாதஸ்வரம் முழங்க, 10 நாள் உற்சவ விழாக்கு கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து, மார்ச், 3ம் தேதி, ஓலை சப்பரத்தில் பஞ்சமூர்த்தி புறப்பாடு, 5ம் தேதி, திருக்கல்யாணம், 7ம் தேதி அபிமுகேஸ்வரர், கவுதமேஸ்வரர், காசி விஸ்வநாதர், வியாழ சோமேஸ்வரர், கும்பேஸ்வரர் கோவில்களில் தேரோட்டம் நடைபெறுகிறது.விழாவின் முக்கிய நிகழ்வாக, 8ம் தேதி, மகாமகம் குளத்தில், முற்பகல், 10:00 மணிக்கு மேல், 11:45 மணிக்குள், மாசிமக தீர்த்தவாரி வைபவம் நடைபெறுகிறது. அப்போது. 12 சிவாலயங்களில் இருந்து பஞ்சமூர்த்திகள், மகாமக குளத்தின் கரைகளில் எழுந்தருளி காட்சியளிக்கின்றனர்.வைணவத் தலங்கள்மாசி மகத்தை முன்னிட்டு வைணவத் தலங்களில் முதன்மையானதாக விளங்கும் சக்கரபாணி கோவில், ராஜகோபாலசுவாமி கோவில், ஆதிவராக பெருமாள் கோவில்களில், 10 நாள் உற்சவம், இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்குகிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி; பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் உப கோயிலான பெரியநாயகி அம்மன் கோவிலில் இன்று (அக்.11ல்) நவராத்திரி ... மேலும்
 
temple news
சென்னை: சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள ஜலகண்டீஸ்வரர் கோயிலில் பிரதமர் மோடி - முதல்வர் விஜய் சுவாமி தரிசனம் ... மேலும்
 
temple news
ராமநாதபுரம்: பகவத் கீதை உலக நன்மையையும், மனித வாழ்வுக்கான வழிமுறைகளையும் எடுத்துக் கூறுகிறது. ... மேலும்
 
temple news
தூத்துக்குடி: குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் இன்று ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், கொளுத்தும் வெயிலிலும் பல்லாயிரக்கணக்கில் திரண்ட பக்தர்கள், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar