உத்திரமேரூர்: உத்திரமேரூர், சுந்தர வரதராஜ பெருமாள் கோவிலில், மாசி மாதத்தில், அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில், ஸ்ரீதேவி, பூதேவியருடன் சுந்தர வரதராஜ பெருமாள் எழுந்தருளி, வலம் வந்தார். தெப்போற்சவத்தை காண, உத்திரமேரூர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் தெப்ப குளத்தை சுற்றிலும் நின்றிருந்தனர்.