பதிவு செய்த நாள்
02
மார்
2020
11:03
திருச்சி: வீரப்பூர் பொன்னர் - சங்கர் கோவில் திருவிழாவை முன்னிட்டு, தங்கையருக்கு, அண்ணமார்கள் கிளி பிடித்து கொடுக்கும் நிகழ்வு நடந்தது. 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர்.
திருச்சி, மணப்பாறை பகுதிகளில், அண்ணமார் என அழைக்கப்படும் பொன்னர் - சங்கர் வரலாற்று சரித்திரம் நடந்தது. ஆகவே, இந்த பகுதிகளில், பொன்னர் - சங்கருக்கு கோவில்கள் கட்டப்பட்டுள்ளன.இவற்றில், வீரப்பூர் கோவில் முக்கியமானது. இந்த கோவில், கொங்கு நாட்டு பகுதியில் பெரும்பாலானோருக்கு குலதெய்வமாக விளங்குகிறது.வீரப்பூர் கோவிலில், நடப்பாண்டு மாசி திருவிழா, பிப்., 24ல் கொடியேற்றத்துடன் துவங்கியது.திருவிழாவின் முக்கிய அம்சங்களில் ஒன்றான, வளநாட்டில், பொன்னர் - சங்கர் வாழ்ந்த கோட்டை பகுதியில், தங்கை தங்காள் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில், குளத்தில் கிளி பிடித்து கொடுத்த நிகழ்வு நேற்று நடந்தது.பொன்னர் - சங்கர் வேடமிட்டவர்கள், தங்கைக்காக, குளத்தில் கிளி பிடித்து கொடுத்தனர். 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வழிபட்டனர்.