பொது தேர்வு மாணவர்களுக்காக ஹயக்கிரீவர் கோவிலில் அர்ச்சனை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02மார் 2020 03:03
புதுச்சேரி: புதுச்சேரி, முத்தியால்பேட்டை லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் அரசு பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்காக ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவர்க்கு சகஸ்ரநாம அர்ச்சனை நடந்தது.
முத்தியால்பேட்டை ராமகிருஷ்ணா நகரில் உள்ள லட்சுமி ஹயக்கிரீவர் கோவிலில், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்காக, சகஸ்ரகநாம அர்ச்சனை, லட்சார்ச்சனை நடை பெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு அலங்காரத்தில் ஹயக்ரீவர் அருள்பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். அர்ச்சனையில் பங்கேற்கும் பக்தர்களுக்கு சகஸ்கர நாம புத்தகம், வெள்ளி டாலர், இரட்சை, பேனா பிரசாதமாக வழங்கப்பட்டது.