அனுப்பர்பாளையம்: திருப்பூரை அடுத்த திருமுருகன் பூண்டியில் புகழ்பெற்ற திருமுருகநாத சுவாமி கோவில் உள்ளது. கோவில் தேர்த்திருவிழா 1ம் தேதி கிராம சாந்தியும் தொடங்கி, 13 ம் தேதி வரை நடக்கிறது. விழாவையொட்டி, கோவிலில் இன்று காலை கொடியேற்றம் நிகழ்ச்சி நடந்தது. நூற்றுக்கு மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து, திருமுருக நாதருக்கு சிறப்பு பூஜை நடந்தது. விழா ஏற்பாடுகளை செயல் அலுவலர் செல்வம் பெரியசாமி, தக்கார் லோகநாதன், ஆகியோர் செய்து வருகின்றனர்.