பதிவு செய்த நாள்
02
மார்
2020
12:03
சென்னை: ‘திருச்சி மாவட்டம், லால்குடி அருகே மீட்கப்பட்டுள்ள, தட்சிணாமூர்த்தி கற்சிலை, எந்த கோவிலுக்கு சொந்தமானது என்பது குறித்து, தகவல் தெரிவிக்கலாம்’ என, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் அறிவித்துள்ளனர். திருச்சி மாவட்டம், லால்குடி அருகேயுள்ள, கோங்குடி கிராமத்தில், மர்ம நபர்கள் பதுக்கி வைத்திருந்த, தொன்மையான தட்சிணாமூர்த்தி கற்சிலையை, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் மீட்டு உள்ளனர். இந்தச் சிலை, எந்த கோவிலுக்கு சொந்தமானது என்று தெரியவில்லை.இதுகுறித்து, வழக்கு பதிந்து விசாரணை நடந்து வருகிறது. விசாரணை அதிகாரியாக இன்ஸ்பெக்டர் செல்வகுமாரி நியமிக்கப்பட்டு உள்ளார். சிலை குறித்த தகவல் அறிந்தோர், கூடுதல் டி.எஸ்.பி., ராஜாராமின், 94981 54500 என்ற, மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், நேற்று அறிவித்துள்ளனர்.