வில்லியனுார்:வில்லியனுார் ஆனந்தம்மாள் சத்திரம் எதிரில் அமைந்துள்ள ஏகாம்பரநாத மகேசுவரர் கோவில் கும்பாபிஷே விழா நேற்று நடந்தது. வில்லியனுார் ஆனந்தம்மாள் சத்திரம் எதிரில் உள்ள ஏகாம்பரநாத மகேசுவரர் கோவில் கும்பாபிஷக விழா கடந்த 29ம் தேதி இரவு கணபதி ஹோமத்துடன் துவங்கியது. அன்று இரவு 9:00 மணிக்கு முதற்கால யாக பூஜையும், நேற்று முன்தினம் இரண்டு மற்றும் மூன்றாம் கால யாக பூஜை நடந்தது. நேற்று காலை 7:30 மணிக்கு நான்காம் கால வேள்வி வழிபாடும். காலை 9:40 மணியளவில் விமான கும்பாபிஷேகமும். அதனை தொடர்ந்து காலை 10:00 மணிக்கு மூலவருக்கு கும்பாபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. விழாவில் முதல்வர் நாராயணசாமி, அமைச்சர் நமச்சிவாயம், சிவா எம்.எல்.ஏ., தி.மு.க., பொருளாளர் குமாரவேல், முகமது யூனுாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.விழாவிற்கான ஏற்பாடுகளை அனந்தம்மாள் ஆதினம் செல்வநாதன், ஜனார்த்தனர் உள்ளிட்ட நிர்வாகிகள் செய்தனர்.