பாலக்காடு: செம்பை பார்த்தசாரதி கோவிலில் 106-வது ஏகாதசி உற்சாகத்தையொட்டி நடந்துவரும் சங்கீத உற்சவம் இன்று நிறைவு பெறுகின்றன. பாலக்காடு மாவட்டம் கோட்டாயி செம்பை பார்த்தசாரதி கோவில் மாசி மாதம் திருவிழா ஏகாதசி திருவிழா கடந்த 2-ம் தேதிகொடி ஏற்றத்துடன் துவங்கின. விழாவையொட்டி நடந்து வரும் நான்கு நாள் சங்கீத உற்சவம் கடந்த 3ம் தேதி பத்மபூஷன் டி.வி., கோபாலகிருஷ்ணன், துவக்கி வைத்தார். சங்கீத உற்சவத்தின் மூன்றாவது நாளான நேற்று மாலை 6 மணியளவில் மூழி குளம் விவேகின் கச்சேரி நடைபெற்றன.இவருக்கு வயலினில் கொடுந்திரபுள்ளி சுப்பராமனும் மிருதங்கத்தில் கொடுத்திரப்புள்ளி பரமேஸ்வரனும் முகர்சங்கில் வெளிநேழி ரமேஷும் பக்கவாத்தியம் வாசித்தார். இதையடுத்து பைஜு.என்.ரஞ்சித்தின் வீணைக் கச்சேரி நடந்தன. இவருக்கு மிருதங்கத்தில் சேர்த்தலை தினேஷும் கடத்தில் ஏலம்குளம் தீபுவும் பக்கவாத்தியம் வாசித்தனர்.
சங்கீத உற்சவத்தின் நிறைவு நாளான இன்று காலை 8.30 க்கு உஞ்ச விருத்தி, 10க்கு பஞ்சரத்தின கீர்த்தனை நடக்கின்றன. தொடர்ந்து இளம் கலைஞர்களின் சங்கீதா ஆராதனை நடைபெறுகின்றன. மாலை பிரகாஷ் உள்ளியேரியின் ஆர்மோனியம் கச்சேரி, விஜய் யேசுதாஸ், ஜயன் ஆகியோரின் சங்கீத கச்சேரி நடைபெறுகின்றன. நாளை நடக்கும் ஆறாட்டு நிகழ்ச்சியுடன் கோவில் உற்சவம் நிறைவு பெறுகின்றன.
யேசுதாஸ் சங்கீதக் கச்சேரி ரத்து: செம்பை பார்த்தசாரதி கோவிலில் ஏகாதசி சங்கீத உற்சவத்தில் தவறாமல் பாடல்கள் பிரபல இசைக் கலைஞர் யேசுதாசிற்க்கு இந்த ஆண்டு சங்கீதக் கச்சேரி கலந்து கொள்ள முடியவில்லை. தற்போது அமெரிக்காவில் உள்ளார். ஏகாதசி உற்சவத்தில் கலந்து கொள்ள முடியாவிட்டாலும் இந்தியாவிற்கு வந்தால் மற்றொரு தினத்தில் குரு சன்னிதியில் வந்து சங்கீத ஆராதனை நடத்துவேன் என்று அவர் அனுப்பிய குறுஞ்செய்தி சுட்டிக்காட்டியுள்ளதாகும் ஏகாதசி நாளில் மற்ற எல்லா கச்சேரிகளும் குறிப்பிட்ட நேரத்தில் நடக்கும் என்றும் திருவிழா குழு தலைவர் சுரேஷ், நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் கீழாத்தூர் முருகன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.