காரைக்கால் நித்யகல்யாண பெருமாள் கோவிலில் திருக்கல்யாணம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07மார் 2020 02:03
காரைக்கால்: காரைக்கால் நித்யகல்யாணப் பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.
காரைக்கால் பாரதியார் சாலையில் உள்ள நித்திய கல்யாண பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவ விழா கடந்த 28ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினந்தோறும் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது. கடந்த 29ம் தேதி சந்திரபிரபை.கடந்த1ம் தேதி சேஷ வாகனம்.கடந்த 2ம் தேதி கருட வாகனத்தில்.கடந்த 3ம் தேதி ஹனுமந்த வானத்தில்.கடந்த 4ம் தேதி சிம்ம வாகனத்தில் வீதியுலா நடைபெற்றது. மேலும் நேற்று முன்தினம் திருக்கல்யாணம் உற்சவம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.நேற்று வெண்ணெய்த்தாழி சேவையில் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்தார்.பின் முக்கிய வீதிகள் வழியாக பெருமாள் வீதி உலா நடைபெற்றது.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.