திண்டிவனம்: புதுச்சேரியில் நடை பெறும் மாசிமக உற்சவத்தில் பங்கேற்பதற்காக, தீவனுாரிலிருந்து லட்சுமி நாராயண பெருமாள் சுவாமி ஊர்வலமாக புறப்பட்டார். புதுச்சேரியில் உள்ள வைத்திக்குப்பத்தில், வரும் 9ம் தேதி மாசி மக உற்வசம் நடை பெறுகிறது. இதில் திண்டிவனம் அடுத்த தீவனுாரில் உள்ள லட்சுமி நாராயண பெருமாள் சுவாமி, 10ம் ஆண்டாக பங்கேற்கிறார். இதையொட்டி, நேற்று காலை 9;30 மணியளவில், தீவனுாரிலிருந்து ஊர்வலமாக லட்சுமிநரசிம்ம பெருமாள் சுவாமி புறப்பட்டார். மாசி மக உற்சவத்தின் போது, காலை 7:00 மணிக்கு வைத்திக்குப்பம் கடற்கரையில் நடை பெறும் தீர்த்தவாரியில் சுவாமி பங்கேற்கிறார். தொடர்ந்து வரும், 11ம்தேதி புதுச்சேரி ச ரஸ்வதி விலாச சபாவில், லட்சுமி நாராயணபெருமாள் திருக்கல்யாண உற்சவம் நடை பெறுகிறது. இத்தகவலை நித்யபடிபாண்டுரங்கன் ரகுமாயி ஆன்மிக கைங்கர்ய சபா குழுவினர் தெரிவித்துள்ளனர்.