Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ... சுந்தர வரதராஜர் கோவில் சீரமைக்க ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருக்கோஷ்டியூரில் மார்ச் 9ல் தெப்பத்திருவிழா: அடிப்படை வசதிகள் கேள்விக்குறி
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 மார்
2020
03:03

சிவகங்கை: திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோயில் தெப்ப உற்ஸவத்திற்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் அடிப்படை வசதிகளான குடிநீர் மற்றும் பாதுகாப்புக்கான நடவடிக்கைகளில் மாவட்ட நிர்வாகம் இறங்கிவில்லை என பக்தர்கள் தெரிவிக்கின்றனர். திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோயில், 108 வைணவ தலங்களில் பிரசித்தி பெற்றது. ராமானுஜரால் பாடல் பெற்ற திருத்தலம். இக்கோயிலில் மாசி திருவிழா பிப்.,28 ம் தேதி துவங்கியது. விழாவை முன்னிட்டு சவுமிய நாராயண பெருமாள் வீதி உலா வருவார். மார்ச் 9 ல் தெப்ப உற்சவம்: முக்கிய நிகழ்வாக பத்தாம் நாளான மார்ச் 9 அன்று தெப்ப உற்ஸவம் நடைபெறும். காலை அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் சுவாமி, அம்பாளுடன் தெப்பம் கண்டருளலும், இரவு லட்சக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் தெப்பத்திருவிழா நடக்கும். இதற்காக தேவஸ் தானம், மாவட்ட நிர்வாகம் சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

அகல் விளக்கு வழிபாடு: தெப்பத்திருவிழாவன்று மதுரை, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, விருதுநகர் உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அகல் விளக்கேற்றி நேர்த்தி செலுத்துவர். இக்கோயிலில் ஒரு முறை அகல்விளக்கில் நெய், எண்ணெய் ஊற்றி அதில், 5 ரூபாய் நாணயத்தை போட்டு தீபமேற்றி வழிபட்டால், அடுத்த ஆண்டிற்குள் வேடிய வரம் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. திருமண தடை நீங்கவும், பிள்ளை வரம் வேண்டியும், குடும்ப விருத்திக்காக விளக்கு ஏற்றி வழிபாடு நடத்துவர். மார்ச் 9 ல் தெப்பத்திருவிழா என்றாலும், கடந்த சில நாட்களாகவே வெளியூர் பக்தர்கள் ஏராளமானவர்கள் தெப்பக்குளத்தில் விளக்கு ஏற்றி வழிபாடு நடத்துகின்றனர்.

அடிப்படை வசதி எங்கே: பக்தர்களின் வருகைக்காக தற்காலிக கழிப்பறை வசதி ஏற்படுத்தி வருகின்றனர். அதே நேரம் கோடை வெயிலாக இருப்பதால், தாகம் தீர்க்க இதுவரை தெப்பக்குளத்தை சுற்றி சுத்திகரிக்கப் பட்ட குடிநீர் வசதி செய்யவில்லை. திருப்புத்துார் மெயின்ரோட்டில் தெப்பக்குளம் இருப்பதால், ஏராளமான பக்தர்கள் பாதுகாப்புடன் வந்து செல்ல வேண்டும். தெப்பகுளத்தின் எதிரே ரோட்டிற்கும், தரைக்கும் ஒரு அடிக்கு பள்ளம் உள்ளது.இப்பள்ளத்தை மூடாமல் விட்டுள்ளதால் வாகனங்கள் விபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.

பாதுகாப்பு கேள்விக்குறி:  வழக்கமாக பக்தர்கள் தெப்பத்தை சுற்றியுள்ள இடங்களில் விளக்கு வைப்பர். இம்முறை தெப்பக்குளத்திற்குள் அகல்விளக்கு, எண்ணெய், பிளாஸ்டிக் பொருட்கள் விழுந்து தண்ணீர் கெட்டு விடாமல் இருக்க, இரும்பு வேலி அமைத்தது வரவேற்க தக்க விஷயம். அதே நேரம் விளக்கு ஏற்ற ஏதுவாக தற்காலிக இரும்பு மேடைகளை தெப்பத்தை சுற்றி வைத்திருக்கலாம். அதை விடுத்து தெப்பத்தை சுற்றி தரைப்பகுதியில் விளக்கு வைக்கவும், இரும்பு தகரங்களை வைத்து தடுப்பு அமைத்துள்ளதால், கூட்ட நெரிசலில் தடுப்புகளுக்குள் பெண்கள் சிக்கி சிரமப்படும் நிலை ஏற்படும். மாவட்ட நிர்வாகம் பக்தர்களுக்கு அடிப்படை குடிநீர், நிழற்குடை வசதி, பாதுகாப்பு வசதிகளை முழுமையாக செய்துதர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: மாற்றுத்திறனாளிகள் மாணவர்களின் வளர்ச்சிக்கு அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது என ... மேலும்
 
temple news
மேலூர்: வெள்ளலூர் நாட்டில் குழந்தைகளை அம்மனாக பாவிக்கும் ஏழைகாத்தம்மன் கோயில் திருவிழாவில் திரளான ... மேலும்
 
temple news
உடுமலை; சங்கடகர சதுர்த்தியை முன்னிட்டு உடுமலை சித்தி புத்தி விநாயகர் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை, ஐஸ்வர்யா நகரில் அமைந்துள்ள, ஸ்ரீ கற்பக விநாயகர், ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ கல்யாண ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா அக்., 10 தேதி தொடங்கி, 22ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar