பதிவு செய்த நாள்
08
மார்
2020
01:03
புதுச்சேரி:புதுச்சேரியில் நடக்கும் மாசிமக தீர்த்தவாரியில் பங்கேற்கும் திண்டிவனம் ஸ்ரீனிவாசப் பெருமாளுக்கு திருக்கல்யாண உற்சவம், வரும் 10ம் தேதியன்று நடக்கிறது.
புதுச்சேரி அலர்மேல் மங்கா சமேத ஸ்ரீனிவாசப் பெருமாள் மாசிமக கடல் தீர்த்தவாரி கமிட்டியின் கவுரவத் தலைவர் பொன்னுரங்கம் அளித்த பேட்டி: திண்டிவனம் நல்லியக்கோடன் நகரில் அமைந்துள்ள கோவிலில் இருந்து அலர்மேல் மங்கா சமேத ஸ்ரீனிவாசப் பெருமாள், மாசிமக கடல் தீர்த்தவாரி உற்சவத்தில் பங்கேற்பதற்காக இன்று மாலை புதுச்சேரிக்கு வருகிறார். சுவாமிக்கு, எல்லப்பிள்ளைச்சாவடியில் உள்ள சிருங்கேரி மடம் சாரதாம்பாள் கோவிலில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. தொடர்ந்து, சுவாமிக்கு திருமஞ்சனம் நடக்கிறது.பின், நாளை காலை, வைத்திக்குப்பம் கடற்கரையில் நடக்கும் தீர்த்தவாரியில் பங்கேற்று, அம்பலத்தாடையார் மடத்து வீதியில் உள்ள வடமுகத்து செட்டியார் திருமண மண்டபம் திரும்பும் சுவாமிக்கு, மாலை 7:00 மணிக்கு ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது.தொடர்ந்து, 10ம் தேதி காலை 10:00 மணிக்கு, சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. ஸ்ரீவில்லிபுத்துார் மணவாள மாமுனிகள் மடத்தின் 24வது பட்டம் சடகோப ராமானுஜ ஜீயர் சுவாமிகள் முன்னிலை வகிக்கிறார். மாலையில், சேஷ வாகனத்தில் சுவாமி திருவீதி உலா நடக்கிறது.வரும் 11ம் தேதியன்று காலை 10:30 மணிக்கு, உலக நன்மைக்காக மகா சுதர்ஸன ேஹாமத்துக்கும் வடமுகத்து செட்டியார் திருமண மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் கூறினார். தீர்த்தவாரி கமிட்டியின் தலைவர் ஞானப்பிரகாசம், செயலர் சிவானந்தம், பொருளாளர் முனுசாமி, செயற்குழு உறுப்பினர்கள் தேவநாதன், நடராஜன், கோவிந்தராஜன், செல்வராஜ் உடனிருந்தனர்.