வீரட்டானேஸ்வரர் கோவிலில் மாசிமக தீர்த்தவாரி உற்சவம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09மார் 2020 10:03
திருக்கோவிலூர்:திருக்கோவிலூர், வீரட்டானேஸ்வரர் கோவில் மாசிமகப் பெருவிழாவின் நிறைவாக தென்பெண்ணை ஆற்றில் தீர்த்தவாரி வைபவம் நடந்தது. திருக்கோவிலூர், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில் கடந்த 28ம் தேதி கொடியேற்றத்துடன் மாசிமகப் பெருவிழா துவங்கியது. விழாவின் நிறைவாக நேற்று தென்பெண்ணையில் தீர்த்தவாரி வைபவம் நடந்தது. காலை 8:00 மணிக்கு மூலவர் வீரட்டானேஸ்வரர், சிவானந்தவல்லி உள்ளிட்ட மூல மூர்த்திகளுக்கு விசேஷ அபிஷேகம், அலங்காரம் நடந்தது. அலங்கார மண்டபத்தில் சிவகாமசுந்தரி சமேத நடராஜருக்கு ஷோடசோபவுபச்சார தீபாராதனை, வீதி உலா, நிறைவாக கோவில் வளாகத்தில் ஊடல் உற்சவம் நடந்தது.மதியம் 11:45 மணிக்கு சிவானந்தவல்லி சமேத வீரட்டானேஸ்வரருக்கு மஞ்சள் நீராட்டு விழா, யாகசாலை மண்டபத்தில் எழுந்தருளி ராஜபுஷ்பம், ரக்க்ஷாபந்தன் சமர்ப்பணம் நடந்தது.