Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மானாமதுரையில் மாசிமக தெப்ப உற்ஸவ ... காரமடை அரங்கநாதர் கோவிலில் பந்த சேவை காரமடை அரங்கநாதர் கோவிலில் பந்த சேவை
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆற்றுக்கால் பகவதி கோவிலில் பொங்கல் விழா கோலாகலம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஆற்றுக்கால் பகவதி கோவிலில் பொங்கல் விழா கோலாகலம்

பதிவு செய்த நாள்

10 மார்
2020
12:03

திருவனந்தபுரம் : ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலில் நேற்றுநடந்த பொங்கல் விழாவில், ஏராளமான பெண்கள் பொங்கலிட்டு அம்மனை வழிபட்டனர்.

மதுரையை தீக்கிரையாக்கிய கண்ணகி, கொடுங்கல்லுார் சென்றதாகவும், வழியில் திருவனந்தபுரம் கிள்ளியாற்றின் கரையில் தங்கியதாகவும் நம்பப்படுகிறது.அவர் தங்கிய இடத்தில் கட்டப்பட்ட கோவிலே, ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில். இங்கு மாசி மாதம் நடைபெறும் பொங்கல் விழா, மிகவும் சிறப்பு பெற்றதாகும்.கடந்த, 1ம் தேதி விழா துவங்கியது. ஒன்பதாம் நாளான நேற்று காலை, 10:30 மணிக்கு, கோவில் முன்புறம் உள்ள அடுப்பில், பூஜாரிகள் தீ மூட்டியதும், ஒலிப்பெருக்கியில் செண்டை மேளம் முழங்கப்பட்டது.

தொடர்ந்து, அனைத்து இடங்களிலும், அடுப்புகளில் தீ மூட்டி, பெண்கள் பொங்கலிட்டனர். கோவிலை சுற்றி, 10 கி.மீ., சுற்றளவில் ரோடு, மைதானம், பஸ் ஸ்டாண்ட், வயல் வெளிகள், தென்னந்தோப்புகள் என அனைத்து இடங்களிலும், பெண்கள் பொங்கலிட்டனர்.பிளாஸ்டிக் இல்லாத பொங்கல் விழாவாக நடத்தப்பட்டது. இரவு, 11:15 மணிக்கு அம்மன் எழுந்தருளல் நிகழ்ச்சி நடந்தது. இன்று இரவு, 12:00 மணிக்கு குருதி பூஜையுடன் விழா நிறைவு பெறும். இந்த பொங்கல் விழா, இரண்டு முறை, கின்னஸ் சாதனைபுத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. கொரோனா பீதியால், பொங்கல் விழா நடைபெறுமா என்ற கேள்வி எழுந்தது. ஆயினும், திட்டமிட்டபடி பொங்கல் விழா நடந்து முடிந்தது. விழாவில், கொரோனா குறித்து, விழிப்புணர்வு பிரசாரமும் மேற்கொள்ளப்பட்டது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் பெய்த கனமழையால் திருக்கோயிலின் உபகோயிலான லட்சுமண தீர்த்த கோயிலை சுற்றி ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் எஸ்.ஆர்.வி.நகர் ஸ்ரீ சக்ர த்ரிசக்தி பீடம் லலிதா பரமேஸ்வரி ... மேலும்
 
temple news
திருமலை, திருமலை திருப்பதியில் நடைபெற்று வரும் ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமியின் நவராத்திரி ... மேலும்
 
temple news
கொல்கத்தா, மேற்கு வங்கத்தில் துர்கா பூஜை கொண்டாட்டங்கள் கோலாகலமாகத் தொடங்கியுள்ளன. பஞ்சமி நாளை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar