பதிவு செய்த நாள்
04
மே
2012
11:05
மதுராந்தகம்: மேல்மருவத்தூரில் உள்ள ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில், சித்ரா பவுர்ணமி விழா, இன்று அதிகாலை 3.30 மணிக்கு, மங்கல இசையுடன் விழா துவங்குகிறது. காலை 4 மணிக்கு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும். உலக நன்மை, இயற்கை சீற்றங்களிலிருந்து மக்களைக் காப்பாற்ற, நாளை மாலை 3.15 மணிக்கு, ஆதிபராசக்தி அம்மன் கோவிலில், 1,008 யாக குண்டங்கள் அமைத்து, வேள்வி பூஜை நடைபெறுகிறது. விழாவை பங்காரு அடிகளார் தீபம் ஏற்றி துவக்கி வைக்கிறார். விழாவில், ஆன்மிக இயக்கத் தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் உட்பட பலர் கலந்து கொள்கின்றனர்.