பதிவு செய்த நாள்
13
மார்
2020
10:03
மொடக்குறிச்சி: நஞ்சை கொளாநல்லியில், கோட்டை மாரியம்மன் கோவில் தேரோட்டம், வெகு விமரிசையாக நடந்தது. கொடுமுடி அருகே, நஞ்சை கொளாநல்லியில், கோட்டை மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு, நடப்பாண்டு தேர்த்திருவிழா, கடந்த, 3ல் பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. முக்கிய நிகழ்வான அலகு குத்துதல், திருத்தேரோட்டம் நேற்று நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதையடுத்து மாவிளக்கு ஊர்வலம், அக்னி சட்டி ஏந்தி ஊர்வலமாக சென்றும், நூற்றுக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். அம்மனுக்கு இன்று சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனை, வாணவேடிக்கை, தெப்போற்சவம் நடக்கிறது. ஊஞ்சல் உற்சவம், அம்மன் குடி புகுதல் நிகழ்ச்சிகளுடன், தேர்த்திருவிழா நாளை நிறைவுபெறுகிறது.