காரைக்குடி: காசி நாட்டுக்கோட்டை நகரச்சத்திரம் மேலாண்மை கழகம் சார்பில், அயோத்தியில் உள்ள நகரத்தார் விடுதியில் 300 ஆண்டு பழமையான தேர் உள்ளது.
தற்போது இந்த தேர் சேதமான நிலையில் உள்ளதால் புதிய தேர் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. காசி நாட்டுக்கோட்டை நகரத்தார் சார்பில், புதிய தேர் காரைக்குடியில் வடிவமைக்கப்படுகிறது. 18 அடி உயரம் உள்ள இத்தேரின் மேற்பகுதி முழுவதும் தேக்கு மரத்தாலும், அடிப்பகுதி வேங்கை மரத்தாலும் உருவாக்கப்பட்டுஉள்ளது. காரைக்குடி ஏகாம்பரம் குடும்பத்தினர் இத்தேரை செய்து வருகின்றனர். புதிதாக செய்யப்பட்ட தேர், நேற்று முன்தினம் வெள்ளோட்டம் பார்க்கப்பட்டு, நேற்று பூஜை செய்யப்பட்டது. அயோத்தி செல்ல தயாராகும் புதிய தேரை குன்றக்குடி அடிகள், பா.ஜ., தேசியச் செயலாளர் எச்.ராஜா, பொது மக்கள் பார்வையிட்டனர்.