புதுச்சேரி: தீவனுார் விநாயகருக்கு 108 சங்காபிஷேகம் நேற்று நடந்தது.சாரம் மாசி மகம் வரவேற்பு குழு சார்பில், புதுசாரம் நடுத் தெருவில் உள்ள சித்தி புத்தி விஜய கணபதி கோவிலில், தீவனுார் பொய்யாமொழி விநாயகருக்கு 108 சங்காபிஷேகம் நேற்று நடந்தது.
தொடர்ந்து, திவ்ய அலங்கார மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. முன்னதாக, விக்னேஸ்வர பூஜையுடன் யாகசாலை பூஜைகள் துவங்கியது. 108 சங்குகள் ஸ்தாபனம் செய்யப்பட்டு, பூஜைகள் நடந்தது. 96 வகையான மூலிகைகளை கொண்டு ஷன்னவதி ஹோமம் நடந்தது.திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இரவு, தீவனுார் விநாயகர் வீதியுலா நடந்தது. விழா ஏற்பாடுகளை, சாரம் மாசிமகம் வரவேற்பு குழுவின் தலைவர் ஆதிகேசவன், செயலாளர் ரவி, பொருளாளர் பாஸ்கரன் மற்றும் விழாக் குழுவினர் செய்திருந்தனர்.