பதிவு செய்த நாள்
15
மார்
2020
05:03
கோவிலுக்குச் செல்லும் பக்தர்களில் பலரும், குருக்கள் கையால், நெற்றியில் விபூதி இட்டுக் கொள்வதே நல்ல விஷயம் என, கருதுகின்றனர்;
இது, தவறான பழக்கம்.இவ்வாறு ஒருவரின் நெற்றியில் விபூதி இட்டு, மிச்ச விபூதியை டப்பாவுக்குள் போடும் போது, அந்நபரின் தோலில் இருக்கும் பாக்டீரியா, வைரஸ், அந்த விபூதியினுாடாக மற்ற வர்களுக்கு பரவும் அபாயமுள்ளது.ஒரு சில பக்தர்கள், இந்த விபூதியை, வாயில் போட்டுக் கொள்ளும் வழக்கத்தையும் கொண்டிருக்கின்றனர். இது போன்ற செயல்கள், சாதாரண சூழ்நிலையிலேயே பாதிப்பை ஏற்படுத்தும்.இவ்வாறு இருக்க, தற்போது தும்மினாலே, கொரோனா வைரஸ் பரவும் என்ற சூழலில், கோவிலுக்கு வரும் பக்தர்கள் நெற்றியில், நேரடியாக விபூதி இடும் பழக்கத்தை, குருக்கள் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். இது குறித்து, ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் உடனடியாக உத்தரவிட வேண்டும்.