ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு கொரோனா பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காமல் அதிகாரிகள் அலட்சியமாக உள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க பொதுமக்கள் கூடும் கோயில், பொது இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு சுகாதாரத்துறை உத்தரவிட்டது. அதன்படிஸ்ரீரங்கம் உள்ளிட்ட சில பிரசித்திபெற்ற கோயிலில் பக்தர்கள் கைகளை சுத்தம் செய்வதோடு, சுகாதாரத்துறை சார்பில் இன்ப்ராரெட் தெர்மாமீட்டர் சோதனையும் செய்யப்படுகிறது.ஆனால் தினமும் திரளான பக்தர்கள் நீராடி தரிசிக்கும் ராமேஸ்வரம் திருக்கோயிலில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் செய்யாமல் கோயில் நிர்வாகம் அலட்சியமாக உள்ளது.எனவே ராமேஸ்வரத்தில் கோயில், ரயில்வே ஸ்டேஷன், பஸ் ஸ்டாண்டில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கு தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என சமூக ஆர்வலர்கள்தெரிவித்தனர்.