பதிவு செய்த நாள்
15
மார்
2020
05:03
மாமல்லபுரம்:கடம்பாடி மாரி சின்னம்மன் கோவிலில், தெப்போற்சவ விழா, கோலாகலமாக நடந்தது.
மாமல்லபுரம் அடுத்த, கடம்பாடியில் உள்ள மாரி சின்னம்மன் கோவிலில், நேற்று முன்தினம் பகல், அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்றது. மாலை, நாதஸ்வர இசை நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, இரவு, 10:00 மணிக்கு, ராஜ அலங்காரத்தில் பெரியம்மன், விநாயகர், குளக்கரையில் எழுந்தருளினர். உற்சவம் காண, சின்னம்மன், தெப்பத்தில், ஒன்பது சுற்றுகள் வலம் வந்தார். நேற்று காலை, 3:30 மணிக்கு, உற்சவம் முடிந்து, மூவரும் வீதியுலா சென்றனர்; பகல், 1:30 மணிக்கு, கோவிலை அடைந்தனர்.பல பகுதிகளிலிருந்து வந்த பக்தர்கள், பொங்கல் படைத்து, நேர்த்திக் கடன் செலுத்தி, அம்மனை தரிசித்தனர்.