சாயல்குடி: சாயல்குடி அருகே மரியூர் பூவேந்தியநாதர் சமேத பவளநிறவல்லியம்மன் கோயிலில் பைரவர் தனி சன்னதியில் வீற்றிருக்கிறார்.நேற்று மாலை 4:30 மணிக்குதேய்பிறை அஷ்டமியை முன்னிட்டுமூலவர் பைரவருக்கு பால், தயிர், பன்னீர்,திரவியப்பொடி உள்ளிட்ட 11 வகையா அபிஷேக ஆராதனைகள் நிறைவேற்றப்பட்டது.அன்னதானம் நடந்தது.ஏற்பாடுகளை மகாசபை பிரதோஷஅன்னதானக்கமிட்டியினர் செய்திருந்தனர்.* உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி சன்னதி முன்புறம் உள்ள கால பைரவருக்குசிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது.