பதிவு செய்த நாள்
17
மார்
2020
12:03
சென்னை: மயிலாப்பூர், கபாலீஸ்வரர் கோவிலில் மூத்த குடிமக்கள், கர்ப்பிணியரின் வசதிக்காக, இலவச, பேட்டரி கார் சேவை, நேற்று துவக்கப்பட்டது.
மயிலாப்பூர், கபாலீஸ்வரர் கோவிலுக்காக, தலா, 6 லட்சம் ரூபாய் மதிப்பிலான, ஆறு இருக்கைகள் கொண்ட, இரண்டு பேட்டரி கார்கள் சுந்தரம் பைனான்ஸ் நிறுவனம் சார்பில், இலவசமாக வழங்கப்பட்டது.இதன் மூலம், மாடவீதிகளில் இருந்து, கோவில் முகப்பு வரை மூத்த குடிமக்கள், கர்ப்பிணியர் எளிதாக வருவதற்கு வசதி செய்யப்படுகிறது.இந்த இலவச பேட்டரி கார்களின் இயக்க விழா, சமீபத்தில் நடந்தது. இதில், அறநிலையத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், சுந்தரம் பைனான்ஸ் நிர்வாக இயக்குனர் ஸ்ரீனிவாச ராகவன் உள்ளிட்டோர் பங்கேற்று துவக்கி வைத்தனர்.இதற்கான ஏற்பாடுகளை, கோவில் இணை கமிஷனர் காவேரி செய்திருந்தார்.