திண்டுக்கல் : கொரோனா வைரஸ் பீதி காரணமாக, திண்டுக்கல் கோயில்கள், வணிகவளாகங்களில் பக்தர்கள், மக்கள் வருகை வெகுவாக குறைந்துள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க தமிழகத்தில் பள்ளி, கல்லுாரிகள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சுகாதாரத்துறை சார்பில் விழிப்புணர்வு முகாம் நடத்தப்படுகிறது.சோப்பு ஆயில் மூலம் கைகளை கழுவ வேண்டும். மக்கள் கூட்டமாக சேர்ந்து செல்வதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதனால் எப்போதும் கூட்டமாக காணப்படும் கோயில்கள், சுற்றுலா இடங்களில் மக்கள் வருகை குறைந்துள்ளது. குறிப்பாக திண்டுக்கல் கோட்டை மாரியம்மன்கோயில், அபிராமியம்மன் கோயில், மலைக்கோட்டை ஆகிய இடங்களில் மக்கள் வருகை குறைந்து வெறிச் சோடியுள்ளது. அபிராமியம்மன்கோயில் சன்னதிவீதி, ரதவீதி பகுதியில் கொரோனா விழிப்புணர்வு மையம் அமைக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ள னர்.