ஸ்ரீவி., கோயில் பூக்குழிக்கு தடை: பக்தர்கள் பிரார்த்தனை போராட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19மார் 2020 12:03
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் பெரியமாரியம்மன் கோயில் பூக்குழித்திருவிழாவிற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளதால் அதிர்ச்சியடைந்த பக்தர்கள் பூக்குழி விழாவை நடத்தக்கோரி பிரார்த்தனை போராட்டம் நடத்தினர்.
இக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் பூக்குழி விழா நடப்பதும் இதில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 12 ஆயிரத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி இறங்குவதும் வழக்கம். இந்தாண்டு விழா கடந்த 12ந்தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று ஏழாம் திருநாள் முடிவடைந்தநிலையில் 23ம் தேதி பூக்குழி திருவிழா நடக்க உள்ளது.கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோயில் திருவிழாக்கள் மற்றும் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சிகளுக்கு தடை விதித்து மாவட்டநிர்வாகம் உத்தரவு பிறப்பித்தது. இது பூக்குழி இறங்கும் பக்தர்களுக்கு பெரும் அதிர்ச்சி , மனவேதனையை ஏற்படுத்தியது.மிகவும் பாரம்பரியமிக்கதும், பல ஆண்டுகளாக நடக்கும் பூக்குழி விழாவிற்கு விதித்த தடையை ரத்து செய்யகோரி நேற்று மாலை 5:00 மணி முதல் பக்தர்கள் கோயிலில்குவிந்தனர். அங்கு கருப்பசாமி சன்னிதியருகே அமர்ந்துபிரார்த்தனை போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசாரும் குவிக்கப்பட்டனர்.சிவகாசி சப்கலெக்டர் தினேஷ்குமார் கூறுகையில், கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோயில் திருவிழாக்கள் நடத்த மார்ச் 31 வரை தடை விதிக்கபட்டுள்ளது. அதன்படி பூக்குழித்திருவிழாவிற்கும் தடை விதிக்கபட்டுள்ளது. மக்கள் பெருமளவில் கூடுவதை தவிர்க்கும்பொருட்டு அறிவுறுத்தபட்டுள்ளது,என்றார்.ஹிந்து முண்ணனி, விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு நிர்வாகிகள் கூறுகையில், கொடியேற்றி 7 நாள் திருவிழாக்கள் நடந்தநிலையில் பூக்குழி விழாவை தடை செய்வது அபசகுனமாகும். தெய்வகுற்றம் ஏற்படும். ,என்றனர்.நேற்று இரவு 10:00 மணியை கடந்தும் பக்தர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.ஆண்டாள் விழாக்கும் தடைகொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோயில் திருவிழாவிற்கு தடை விதிக்கபட்டுள்ள நிலையில் மார்ச் 29 அன்று ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் நடக்கும் திருக்கல்யாண கொடியேற்றத்திற்கும் தடை விதிக்கபட்டுள்ளதாக, சிவகாசி சப்கலெக்டர் தினேஷ்குமார் தெரிவித்துள்ளார்.