காரைக்குடி: காரைக்குடியில் முத்து மாரியம்மன் கோயில் திருவிழாவில், கொரோனா பீதியால், பக்தர்கள் கூட்டம் குறைய வாய்ப்புள்ளதாக எதிர்பார்த்த நிலையில் ஏராளமான பக்தர்கள் அம்மனை வணங்கி சென்றனர்.
கொரோனா வைரசால் பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.பரவும் வைர ஸைள கட்டுப்படுத்த தடுப்பு பணிகளும், பாதுகாப்பு பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. திருமணமண்டபங்கள், திரையரங்குகள் என மக்கள் கூடும் அனைத்து இடங்களும் பாதுகாப்பு காரணமாக மூடப்பட்டுள்ளது. இந்நிலையில், காரைக்குடியின் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன்கோயிலின் முக்கிய நிகழ்ச்சியான பால்குடம் மற்றும் பூக்குழி நேற்றுநடந்தது. கொரோனாவால் மக்கள் கூட்டம் குறைய வாய்ப்புள்ளதாக கருத்து நிலவியது. எனினும் பக்தர்கள் எதைப்பற்றியும் கவலைப்படாமல் கூட்டமாக வந்து தங்களது நேர்த்தியை செலுத்தி சென்றனர்.