உலக பிரசித்தி பெற்ற கங்கைகொண்ட சோழபுரம் கோவில் மூடல்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19மார் 2020 04:03
பெரம்பலுார்: கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உலக பிரசித்தி பெற்ற அரியலுார் மாவட்டம், கங்கைகொண்டசோழபுரம் பிரகதீஸ்வரர் கோவில் மூடப்பட்டது.
அரியலுார் மாவட்டம், கங்கைகொண்டசோழபுரம் கிராமத்தில் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட 1,000 ஆண்டு பழமையான பிரகதீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள சிவலிங்கம் 60 அடி சுற்றளவும் பதிமூன்றரை அடி உயரமும் கொண்ட உலக அளவில் புகழ்பெற்ற கோவிலாகும். இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பக்தர்கள் வந்து, பிரகதீஸ்வரன் ர தரிசிப்பது கட்டிடக்கலைக்கு சான்றாக விளங்கும் இக்கோவிலை கண்டு வியந்து செல்கின்றனர். தற்போது, கொரோனா அச்சுறுத்தலால் வெளியிடங்களில் பொதுமக்கள் அதிக அளவில் கூடுவதை தடுக்கும் வகையில், அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருவதால் கங்கைகொண்டசோழபுரம் பிரகதீஸ்வரர் கோவில் பக்தர்கள் வருகைக்கு மார்ச் 31 வரை தடை விதிக்கப்பட்டு, கோவிலின் முகப்பில் உள்ள இரும்புக் கதவுகள் பூட்டப்பட்டது. இதனால் கோவிலுக்கு வந்த பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். இருப்பினும், சிவாச்சாரியார்கள் நாள்தோறும் சாமிக்கு அனைத்துவித பூஜைகளையும் செய்வார்கள் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.