பதிவு செய்த நாள்
20
மார்
2020
10:03
திருப்பூர்: விரலி மஞ்சள் கட்டிய, தாலிக்கயிறுகளை உத்தரவு பெட்டியில் வைத்து, வைரஸ் பாதிப்பை மஞ்சள் கிருமிநாசினியாக கட்டுப்படுத்தும் என, சிவன்மலை முருகன் குறிப்பால் உணர்த்தியதாக, பக்தர்கள் தெரிவித்துள்ளனர். காங்கயம், சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், பக்தர்கள் கனவில் தோன்றும், பொருட்கள் உத்தரவு பெட்டியில் வைத்து பூஜிக்கப்படுகிறது.
பெட்டியில் வைக்கும் பொருளை மையமாக கொண்ட நிகழ்வுகள், அடுத்துவரும் மாதங்களில் நடக்கும் என்பது, பக்தர்களின் நம்பிக்கை.இச்சூழலில், சிவன்மலை முருகன் கோவிலில், கடந்த, ஜன.,29 ம் தேதி விரலி மஞ்சள் கட்டிய, தாலிக்கயிறுகள் வைத்து பூஜை நடந்தது. அதற்கு பிறகு, மஞ்சள் மார்க்கெட்டில் சில, பல மாற்றங்கள் இருக்கத்தான் செய்தது. எல்லாவற்றுக்கும் மேலாக, கொரோனா வைரஸ் பாதிப்பு உலகை ஆட்டிவித்துள்ளது. வைரஸ் பாதிப்புக்கு, மஞ்சள் தான் சரியான கிருமிநாசினியாக இருக்கு மென, டாக்டர்களும் ஒப்புக்கொள்கின்றனர். அதாவது, வைரஸ் தொற்று ஏற்படாமல் தடுப்பதற்கான சிறந்த கிருமிநாசினியாக மஞ்சள் இருக்கிறது. பக்தர்கள் கூறுகையில்,சிவன்மலை கோவிலில், உத்தரவு பெட்டியில் வைக்கப்படும் பொருட்கள் தொடர்பான நிகழ்வு ஏதேனும் நடக்கும். வைரஸ் பாதிப்பை சீரமைக்க மஞ்சள் தான் சரியான மருந்து என்பதை, முருகப்பெருமான் குறிப்பால் உணர்த்தியதாக மெய்சிலிர்க்கிறோம், என்றனர்.