அந்தக் காலத்தில் கடிகை எனப்படும் சிறிய பானையைப் பார்த்து நேரம் சொன்னார்கள். அடியில் சிறுதுளையிட்ட பானையில் நீர் நிரப்பி,தொங்க விடுவார்கள். அதில் இருந்து சொட்டு சொட்டாக தண்ணீர் விழுவதைக் கணக்கில் கொண்டு நேரம் கண்டுபிடித்தார்கள். அப்போது நேரத்தை நாழிகை அடிப்படையில் கணிப்பது வழக்கம். ஒரு நாழிகை என்பது 24 நிமிடம். கடிகை என்ற சொல்லுக்கு நாழிகை என்றும் பொருள் உண்டு. கடிகை என்ற சொல் கடிகா ஆக திரிந்து, இப்போது கடிகாரம் ஆகியுள்ளது.