அக்காலத்தில் பள்ளிகளை கடிகா ஸ்தானம் என்றனர். பின் வித்யாசாலை ஆனது. இப்போது கூட வித்யாலயம் என்ற பெயரில் பள்ளிகள் உள்ளன. தமிழில் பள்ளிகளை கடிகை என்பர். ஒரு காலத்தில் குருகுலப்பள்ளிகள் இருந்தன. இங்கு வேதம், அறிவியல், வானவியல், ஜோதிடம், வீர வித்தைகள் கற்றுத்தரப்பட்டன. கடலூர் மாவட்டம் குடியாத்தம் அருகிலுள்ள திருவல்லம் கிராமத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டு ஒன்றில் இந்த தர்மத்துக்கு ஹானி(துன்பம்) உண்டாக்குபவன் கடிகையிலுள்ள ஏழாயிரம் பேரையும் கொன்ற பாவத்துக்கு ஆளாவான் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம், அக்காலத்தில் இப்பகுதியில் இருந்த ஒரு பள்ளியில் 7ஆயிரம் பேர் படித்துள்ள விபரம் தெரிய வருகிறது. கல்விக்கு எக்காலத்திலும் முக்கியத்துவம் இருந்துள்ளது. மாணவர்கள் இதையெல்லாம் உணர்ந்து, பெற்றவர்களுக்கு கஷ்டம் கொடுக்காமல், தாங்களாகவே படித்து முன்னுக்கு வர வேண்டும்.