பதிவு செய்த நாள்
22
மார்
2020
03:03
ஆத்தூர்: சிவன் கோவில்களில் நடந்த சனி பிரதோஷ பூஜையில், பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. சனி பிரதோஷத்தையொட்டி, ஆத்தூர் அடுத்த, தென்பொன்பரப்பி, சொர்ணபுரீஸ்வரர் கோவிலில், நேற்று மாலை, 4:30 மணிக்கு, நந்தி பகவானுக்கு, பால், தயிர், சந்தனம், மஞ்சள் உள்பட, 16 வகை அபி?ஷகம், அருகம்புல் மாலைகள் சாற்றி, தீபாராதனை நடந்தது. கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க, பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், அவர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை. கோவில் வெளிப்புறம், போலீசார் நிறுத்தப்பட்டிருந்ததால், பக்தர்கள் சற்று நேரம் காத்திருந்து விட்டு திரும்பிச்சென்றனர். அதேபோல், ஆத்தூர், கோட்டை காயநிர்மலேஸ்வரர், வெள்ளை விநாயகர் கோவிலில் உள்ள மகாலிங்கேஸ்வரர், வீரகனூர் கங்கா சவுந்தரேஸ்வரர், தம்மம்பட்டி காசிவிஸ்வநாதர் உள்ளிட்ட சிவன் கோவில்களில் அபி?ஷகம், பூஜை நடந்தது. மேலும், தாரமங்கலம் கைலாசநாதர், உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோவில்களுக்கு வந்த பக்தர்கள், அதன் வெளியே நின்று தரிசித்துவிட்டு சென்றனர்.
பதிகம் பாடிய...: உலகை உலுக்கும், கொரோனா வைரஸ் தாக்குதலிலிருந்து மக்களை காக்க வேண்டி, ஆட்டையாம்பட்டி, சென்னகிரி வட்டமலை காலனியிலுள்ள மருந்தீசர் கோவிலில், மனோகரன், மோகன், மகாதேவன், செல்வகணேசன், சிவகுமார் உள்ளிட்ட சிவனடியார்கள் ஒன்றுகூடி, கோளறு திருப்படிகத்தை பாராயணம் செய்தனர். இதனால், நவ கிரகங்களால் ஏற்படும் இன்னல் விலகி, மக்கள் துன்பம் துயர் நீங்கி இன்புறுவர் என, திருஞானசம்பந்தர் இப்பதிகத்தை இயற்றியுள்ளார்.