திருப்புவனத்தில் களையிழந்த மாரியம்மன் கோயில் திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23மார் 2020 03:03
திருப்புவனம் : திருப்புவனத்தில் நேற்று முழுவதும் வீடுகளுக்குள் பொதுமக்கள் முடங்கியதால் அமைதி நிலவியது.
நாடு முழுவதும் மக்கள் ஊரடங்கிற்கு நேற்று அழைப்பு விடுத்ததையடுத்து அமைதி நிலவியது. திருப்புவனம் மாரியம்மன் கோயிலில் பங்குனி திருவிழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறும், இந்தாண்டு 16ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. நேற்று ஞாயிற்றுக்கிழமை கோயிலில் காலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதும், குறைந்த பட்சம் 5 ஆயிரம் பேர் வரை பங்கேற்பார்கள்,.அன்னதானம், நீர் மோர் வழங்கல், பொழுதுபோக்கு அம்சங்களான ராட்டினம் உள்ளிட்டவை களை கட்டும். மக்கள் ஊரடங்கு காரணமாக எதுவுமே நடைபெறவில்லை. கோயிலில் வழக்கமான பூஜை மட்டுமே நடந்தது. வீதிகளில் ஒருசிலரை தவிர அமைதி நிலவியது. தெருக்களில் கூட சிறுவர்கள் நடமாட்டம் இல்லை.