ரிஷிவந்தியத்தில் வீடுகளுக்கு முன் விளக்கேற்றி சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23மார் 2020 03:03
ரிஷிவந்தியம்: சூளாங்குறிச்சியில் வீடுகளுக்கு முன் விளக்கு ஏற்றி, மஞ்சள் கரைத்த சொம்பை வைத்து வழிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் விதமாக மக்கள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் வீடுகளுக்கு முன் விளக்கு ஏற்றி, தண்ணீரில் மஞ்சலை கரைத்தால் நோய் பரவாது என்ற தகவல் வேகமாக பரவியது.இதேபோல் சமயபுரத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் மூலவர் கழுத்தில் இருந்த தாலி கீழே விழுந்ததால் ஆபத்து ஏற்படும் என மற்றொரு தகவல் பரவியது.இந்த இரண்டு தகவலால் ரிஷிவந்தியம் அடுத்த சூளாங்குறிச்சி கிராமத்தில் பெருமாள் கோவில் தெரு, பிள்ளையார்கோவில் தெரு, மெயின் ரோடு உட்பட பல்வேறு இடங்களில் தங்களின் வீடுகளுக்கு முன் விளக்கு ஏற்றி வைத்து பெண்கள் வழிபட்டனர்.சொம்பு தண்ணீரில் மஞ்சலை கரைத்து அதனுடன் வேப்பிலை, செம்பருத்தி, ரோஜா பூக்களை வைத்தும், சர்க்கரை, அருகம்புல் வைத்தும் வழிபட்டனர்.இதே போல் பலரது வீடுகளில் சொம்பு வைத்து வழிபாடு நடத்தப்பட்டது.