பதிவு செய்த நாள்
24
மார்
2020 
03:03
 
 முகலிவாக்கம் : கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக, முகலிவாக்கத்தில், வேப்பிலை கலந்த மஞ்சள் நீரை, பெண்கள் வீட்டு வாசலில் தெளித்து வருகின்றனர்.
கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்தும் வகையில், பல்வேறு நடவடிக்கைகளை, சுகாதாரத் துறை எடுத்து வருகிறது. கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க, வேப்பிலை, மஞ்சள் அரைத்த கலவையை, தண்ணீரில் கலந்து, வீட்டு வாசலில் தெளித்தால் நல்லது என, சித்த மருத்துவர்கள் அறிவுறுத்தி இருந்தனர்.அதன் மகத்துவத்தை உணர்ந்து, முகலிவாக்கம் நலச்சங்கத்தினர், வீடுகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதையடுத்து, அப்பகுதி பெண்கள் பலர், வீட்டு வாசலில், வேப்பிலை, மஞ்சள் கலந்த தண்ணீரை தெளித்து வருகின்றனர். இதேபோல, ஒவ்வொருவரும் தங்கள் வீட்டு வாசலில், வேப்பிலை, மஞ்சள் கலந்த தண்ணீர் தெளிக்க வேண்டும் என, நலச்சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.