ஸ்ரீவி., பெரியமாரியம்மன் கோயிலில் பூவாசல் சுற்றி விரதம் முடித்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24மார் 2020 03:03
ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார் பெரியமாரியம்மன் கோயில் பூக்குழி விழா கொடியேறிய நிலையில் கொரோனா முன்னெச்சரிக்கையாக தடைவிதிக்கபட்டதால் பூவாசலை சுற்றி வந்தப்படி பல ஆயிரத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் தங்கள் விரதத்தை முடித்தனர். இன்றிரவு கொடியிறக்கத்துடன் விழா நிறைவு பெறுகிறது.
இக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனியில் நடக்கும் பூக்குழி திருவிழாவில் 12 ஆயிரத்திற்கும மேற்பட்ட பக்தர்கள் தீ மிதிப்பது வழக்கம். இந்தாண்டு கடந்த மார்ச் 12 அன்று கொடியேற்றத்துடன் விழா துவங்கியநிலையில் கொரோனா நோய் தடுப்பு முன்னெச்சரிக்கையாக திருவிழாவிற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது. இதையடுத்து மண்டகபடிகளும், சுவாமி தரிசனமும் நிறுத்தபட்டது. இந்நிலையில் பூக்குழி நாளான நேற்று காலை 6:00 மணி முதல் உள்ளூர் மற்றும் சுற்றுக்கிராமங்களை சேர்ந்த பலஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள், மஞ்சள் உடை அணிந்தும், பூச்சட்டி எடுத்தும் கோயில் முன்புள்ள பூவாசலை சுற்றி வந்து அம்மனை வணங்கிதங்கள் விரதத்தை நிறைவு செய்தனர். இந்நிலையில் பூக்குழிதிருவிழா நிறைவு செய்வது குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் தாசில்தார் கிருஷ்ணவேணி, டி.எஸ்.பி.,ராஜேந்திரன், தக்கார் இளங்கோவன், செயல் அலுவலர் கலாராணி, ஆகமவல்லுனர்கள் மற்றும் மண்டகபடிதாரர்கள் பங்கேற்றனர். இன்றிரவு வழக்கம்போல் திருவிழாகொடியிறக்கம் செய்வதும், தற்போதுள்ள பிரச்னைகள் முடிந்தபின் பரிகார பிரார்த்தனை நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது.