பதிவு செய்த நாள்
05
மே
2012
10:05
கூடலூர்: மங்கலதேவி கண்ணகி கோவிலில், சித்ரா பவுர்ணமி விழா நாளை நடக்கிறது. தமிழக- கேரள எல்லையில் உள்ள கண்ணகி கோவில் சித்ரா பவுர்ணமி விழா, நாளை (மே 6) நடக்கிறது. குமுளியில் இருந்து 14 கி.மீ. தொலைவில், கேரள வனப்பகுதி வழியாக கோயிலுக்கு செல்லலாம். பளியன்குடியில் இருந்து 6.6 கி.மீ., ல், தமிழக வனப்பகுதியில் நடைபாதையும் உள்ளது. குமுளி வழி செல்வோருக்கு, குமுளி பஸ் ஸ்டாண்ட், அம்பாடி ஓட்டல் அருகே "ஜீப் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பளியன்குடியில் இருந்து நடந்து செல்லும் பாதையில், குடிநீர், மருத்துவ வசதிகள் செய்யப்பட்டுள்ளன. பளியன்குடிக்கு, கூடலூரில் இருந்து தமிழக அரசு பஸ்கள் விடப்பட்டுள்ளன. கோவிலுக்கு செல்வோர் பாலிதீன் பை, ஒரு லிட்டர், 2 லிட்டர் பிளாஸ்டிக் தண்ணீர் கேன்களை பயன்படுத்தக் கூடாது. இவற்றை தவிர்ப்பதற்காக, நடந்து செல்லும் பாதையில் குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது. காலை 6 மணியில் இருந்து மாலை 3 மணி வரை மட்டுமே, குமுளியில் இருந்து பக்தர்கள் கோயிலுக்கு செல்லலாம். சமீபத்தில் நடந்த முல்லைப் பெரியாறு அணைப்பிரச்னையால், அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்க, கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கோவிலில், பக்தர்களுக்கு உணவு வசதிகளை, மங்கலதேவி கண்ணகி அறக்கட்டளையினர் செய்துள்ளனர்.